--------------------------------------------------
சிரிப்பதற்கான நேரம்...!
-------------------------------------------------
ஆசிரியர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினா போதும்.
மாணவன் : அது எப்படி சார் முடியும், ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தான் ஸ்கூல்.!!!
ஆசிரியர் : 😩😩
--------------------------------------------------
ஜோசியர் : கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தோஷம் நீங்கிடும்...
விமல் : அப்படியா... என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்..
விமல் : 😒😒
--------------------------------------------------
என்ன கொடுமை சார் இது?
--------------------------------------------------
👪 கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனாங்க...
நீதிபதி : உங்களுக்கு 3 குழந்தைகள் 👶 இருக்காங்க... எப்படி பிரிச்சுப்பீங்க?
ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா ஆலோசனை செஞ்சாங்க...
கடைசியில் கணவன் சொன்னான் சரி சார், அடுத்த வருடம் நாங்க இன்னொரு குழந்தையோட வரோம்.
நில்லுங்க... இன்னும் ஜோக் முடியல.... 9 மாசம் கழிச்சு...
அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது...😉👯👯
--------------------------------------------------
காதல்...!
--------------------------------------------------
எட்டி உதைத்தாலும் கட்டி அணைப்பேன் என்பது
தாயின் காதல்...💗
தூக்கி எறிந்தாலும் தாங்கிப் பிடிப்போம் என்பது
தந்தையின் காதல்...💗
முட்டி மோதி சண்டை போட்டாலும் பிரிய மறுப்பது என்பது
சகோதர காதல்...💗
இடியே விழுந்தாலும் என்றும் பிரியாது இருப்பது என்பது
நட்புக் காதல்...💗
பிரிவுகள் தொடரினும் உறவினை வளர்க்கும் உறவு
கணவன், மனைவி காதல்...💗
ஆனால் சின்ன சண்டை வந்தாலே பேசமால் மௌனமாக கொல்வது
காதலர்களின் காதல்...💗
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக