மேலும் போலியான தகவல்களை பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு டெலிகிராம் செயலிக்கு எச்சரிக்கை விடுத்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பிரேசில் அதிபர் போல்சனாரோ டெலிகிராம் செயலி மூலம் தொண்டர்களோடு தொடர்பில் இருந்து வந்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் டெலிகிராம் செயலி எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்த செயலிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து அறிவித்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் நாட்டின் சட்டங்களை பின்பற்றி செயல்படுவதாகவும் டெலிகிராம் செயலி அதை பின்பற்ற தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு டெலிகிராம் செயலி பிரேசிலில் தடை விதித்து அறிவிக்கப்பட்டது.
தங்கள் அலட்சியத்திற்கு மன்னிப்பு
இதையடுத்து தங்கள் அலட்சியத்திற்கு தான் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்ளூர் உத்தரவுகளுக்கு இணங்கி அபராதம் செலுத்தும் வரை டெலிகிராம் செயலியை அதிகாரப்பூர்வமாக இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனமான அனடெல்லை நீதிபதி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து டெலிகிராம் எப்போதும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது எனவும் என்ன நடந்தது என்பது தகவல்தொடர்பு தொடர்பான தவறான புரிதல் எனவும் பிரேசிலில் உள்ள டெலிகிராமின் வழக்கறிஞர் ஆலன் தாமஸ் குறிப்பிட்டார்.
இதையடுத்து டெலிகிராம் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், அலட்சியத்திற்கு பிரேசில் உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோருவதாகக் கூறினார்.
பிரதான சேவையாகும் டெலிகிராம்
எஸ்எம்எஸ், இமெயில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதள தகவல் பரிமாற்ற வசதிகள் பயன்பாட்டில் உள்ளது. இதன்காரணமாக தந்தி என்ற சேவை கேள்விபட்ட ஒன்றாகவே மாறிவிட்டது என கூறலாம்.
1837ல் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் எப். பி மோர்ஸ் என்பவர் தந்தி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இந்த சேவை 1850 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் தந்தி கொல்கத்தாவின் கிழக்கு நகரத்தில் இருந்து தெற்க்கு பகுதியில் உள்ள டைமெண்ட் கார்பர் என்னும் இடத்திற்க்கு அனுப்பப்பட்டது.
பாதுகாப்பான சேட்டிங் வசதி
காலப்போக்கில் தந்தி சேவை என்ற சொல் மறைந்தாலும் அதை நினைவுப்படுத்தும் விதமாக டெலிகிராம் என்ற பெயரில் சேட்டிங் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
பாதுகாப்பான சேட்டிங் வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்வது டெலகிராம் செயலியைத்தான். உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் ரகசியமான தகவல்களை பயமின்றி சேட்டிங் செய்யலாம்.
டெலிகிராம் செயலி 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ் என்பரவால் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆண்டிராய்டு பயனர்களுக்கும் அடுத்த சில மாதங்களில் ஐஓஸ் பயனர்களுக்கும் உருவாக்கப்பட்டது. இந்த செயலி தகவல் பரிமாற்றம், வீடியோ தொடர்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவை.
டெலிகிராம் செயலி உருவாக்கியவர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்
டெலிகிராம் செயலியில் 1.5 ஜிபி வரை அளவுள்ள வீடியோக்களை பரிமாறிக் கொள்ளலாம். சமீபத்தில் அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோசின் வாட்ஸ்அப் கணக்கை சவுதி இளவரசர் ஹேக் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஜெஃப் பெசோஸ் டெலிகிராம் கணக்கை பயன்படுத்தியிருந்தால் ஹேக் செய்திருக்க முடியாது எனவும் வாட்ஸ்அப் கணக்கு எளிதாக ஹேக் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் டெலிகிராம் நிறுவனம் பவல் துரவ் தெரிவித்தார்.
சில காலக்கட்டங்களுக்கு முன்பு டெலிகிராம் ஒரு இந்திய செயலி எனவும் அதை இந்தியனாய் இருந்தால் பயன்படுத்தும்படியும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவின என்பது கவனிக்கத்தக்க ஒன்று. டெலிகிராம் செயலி உருவாக்கியவர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக