Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 மே, 2022

3 மடங்கு அதிக நஷ்டத்தில் சோமேட்டோ.. பங்கு முதலீட்டாளர்களுக்குத் திக் திக்..!

இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட நாள் முதல் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான ஏமாற்றம் அளித்து வரும் நிலையில் இந்தக் காலாண்டில் முடிவுகளை அதிகப்படியான நம்பிக்கை வைத்த எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோமேட்டோ

மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் சோமேட்டோ நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 3 மடங்கு அதிக நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் 134.2 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் மார்ச் 2021 உடன் முடிந்த காலாண்டில் 359.7 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது

வருவாய்

மேலும் இக்காலாண்டில் சோமேட்டோ சுமார் 1,211.8 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டு 692.4 கோடி ரூபாய் வருமானத்தைக் காட்டிலும் 75 சதவீதம் அதிகமாகும். உணவு டெலிவரி வர்த்தகத்தில் மார்ஜின் குறைத்த காரணத்தால் EBITDA நஷ்டம் அதிகரித்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

300 நகரங்கள்

மார்ச் காலாண்டில் மட்டும் சோமேட்டோ நிறுவனம் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தைப் புதிதாக 300 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் வர்த்தகம் செய்யும் நகரங்களின் எண்ணிக்கை 1000த்திற்கும் அதிகமாகியுள்ளது. இந்த 300 புதிய நகரங்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது.

2022  நிதியாண்டு

மார்ச் காலாண்டில் மட்டும் சோமேட்டோ நிறுவனம் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தைப் புதிதாக 300 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் வர்த்தகம் செய்யும் நகரங்களின் எண்ணிக்கை 1000த்திற்கும் அதிகமாகியுள்ளது. இந்த 300 புதிய நகரங்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை

இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆன்லைன் சேவை நிறுவனத்தில் போதுமான டெலிவரி ஊழியர்கள் இல்லாத காரணத்தால் தற்போது அதிகரித்துள்ள வர்த்தகத்தைச் சமாளிக்க முடியாமல் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தடுமாறி வருகிறது.

வர்த்தக பாதிப்பு

இதனால் நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. இதைக் காலாண்டு முடிவுகளில் சோமேட்டோவும் ஒப்புக்கொண்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக