பெண் ஒருவரை பழிவாங்குவதற்கு அவரின் செல்போன் எண்ணை செக்ஸ் சாட் செய்வதற்கான எண் எனக் கூறி இணையத்தில் பரப்பிய குற்றத்திற்காக ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி கர்வால்நகர் காவல்துறை அமித் யாதவ் என்ற 22 வயது ரயில்வே ஊழியரை இந்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக மே 10 ஆம் தேதி அன்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு செல்போன் மூலம் கடந்த சில நாள்களாகவே பாலியல் தொல்லை செய்யும் விதமாக அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருகின்றன என புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறை சைபர்துறை மூலம் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் அமித் யாதவ் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அமித் யாதவ் வாஸ்ட்ஆப் அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் எண்ணை பரப்பியுள்ளார்.
பழிவாங்கும் எண்ணத்தில் அமித் யாதவ்
கைது செய்யப்பட்ட அமித் யாதவ் ரயில்வே கேட்ரிங்கில் பணிபுரிபவர். இவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிக்கும் 2020ஆம் ஆண்டு அறிமுகம் ஆகியுள்ளது. அப்போது இருவரும் தங்கள் எண்ணை பகிர்ந்து பேசியுள்ளனர். நாளடைவில் இது உறவாக மலர்ந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வரவே அவர்கள் அமித் யாதவை தொடர்பு கொண்டு திட்டி கண்டித்துள்ளனர். அப்போது, புகார் அளித்த பெண் தனது எண்ணில் இருந்து அமித் யாதவை தொடர்பு கொண்டு திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமித் அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் எண்ணை ஆபாச செயல்பாடுகளுக்காக பரப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த அமித் யாதவ், வேலைக்காக 2020ஆம் ஆண்டு டெல்லி வந்துள்ளார். இவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளை ஆதாரமாக காவல்துறை கைப்பற்றியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக