இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது, இதில் உள்ள ரீல்ஸ்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிரும்போது இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.
இருப்பினும், சில நேரங்களில் சில ரீல்களை ஆஃப்லைனில் சேமித்து வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம். ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்நுழைந்து, நீங்கள் விரும்பும் ரீல்ஸ்களை, உங்கள் மொபைலில் MP4 வீடியோக்களாக டவுன்லோட் செய்துகொள்ள உதவும் பல வீடியோ டவுன்லோடு ஆப்ஸ்கள் உள்ளன.
இருப்பினும், இந்த ஆப்ஸ் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல, ஏனெனில் அதில் நீங்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேசமயம் நீங்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கில் உள்நுழையத் தேவையில்லாமல் ரீல்களைப் டவுன்லோடு செய்ய அனுமதிக்கும் இணையதளமான iGram எனும் ஆன்லைன் டூல்ஸ்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
கீழ்கண்ட சில படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இதனை செய்யலாம்.
1) நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் ரீலைக் கண்டறிந்து, அதன் இணைப்பை/URLஐ காபி செய்யவும். எந்த ரீல் வீடியோவிலும் மூன்று-புள்ளி மெனுவைத் தட்டுவதன் மூலம் இதைச் செய்யலாம், இந்த மெனு கீழ் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. நீங்கள் அதைத் தட்டும்போது, மேலும் சில விருப்பங்கள் பாப் அப் செய்வதைக் காண்பீர்கள். 'காபி லிங்க்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2) உங்களுக்குத் தெரிந்த எந்த ஆன்லைன் ரீல்-டவுன்லோடு இணையதளத்திற்கும் சென்று, நீங்கள் காபி செய்த இணைப்பு/URL ஐ பேஸ்ட் செய்யுங்கள். உதாரணமாக iGram ஃபோன்கள் மற்றும் கணினிகள் என இரண்டிலும் நன்றாக வேலை செய்கிறது.
3) நீங்கள் காபி செய்த லிங்கை பேஸ்ட் செய்ததும், பக்கத்தில் உள்ள டவுன்லோடு பட்டனை அழுத்தவும், இப்போது அந்த வீடியோவை போஸ்ட் செய்த கணக்கின் ப்ரீவியூவை காணமுடியும். ப்ரீவியூவுக்கு கீழே உள்ள 'எம்பி4 டவுன்லோடு' பட்டனை கண்டறிந்து, டவுன்லோடு செய்ய தொடங்கலாம்.
நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோவானது உங்கள்மொபைலின் கேலரி அல்லது உங்கள் மொபைலின் ஃபைல் மேனேஜரில் இருக்கும். இதனை யாருக்காவது வாட்ஸ்அப் அல்லது ட்விட்டர் மூலம் நீங்கள் அனுப்ப விரும்பினால் மீடியா தேர்வு பகுதியில் காமிக்கப்படும்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக