>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

    02-02-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தை 19 - வெள்ளிக்கிழமை

    🔆 திதி : பிற்பகல் 12.40 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.25 வரை சித்திரை பின்பு சுவாதி.

    🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 02.25 வரை சித்தயோகம் பின்பு காலை 06.35 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 பூரட்டாதி, உத்திரட்டாதி

    பண்டிகை

    🌷 ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    வழிபாடு

    🙏 பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.

    விரதாதி விசேஷங்கள்:

    💥 சுபமுகூர்த்த தினம்

    💥 தேய்பிறை அஷ்டமி

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 மாங்கல்யம் செய்ய சிறந்த நாள்.

    🌟 பெயர் சூட்ட நல்ல நாள்.

    🌟 திருமணம் செய்ய ஏற்ற நாள்.

    🌟 மருத்துவம் கற்க உகந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 10.46 AM முதல் 12.29 PM வரை 

    ரிஷப லக்னம் 12.30 PM முதல் 02.31 PM வரை 

    மிதுன லக்னம் 02.32 PM முதல் 04.43 PM வரை 

    கடக லக்னம் 04.44 PM முதல் 06.52 PM வரை 

    சிம்ம லக்னம் 06.53 PM முதல் 08.55 PM வரை 

    கன்னி லக்னம் 08.56 PM முதல் 10.57 PM வரை 

    துலாம் லக்னம் 10.58 PM முதல் 01.03 AM வரை 

    விருச்சிக லக்னம் 01.04 AM முதல் 03.15 AM வரை 

    தனுசு லக்னம் 03.16 AM முதல் 05.22 AM வரை 

    மகர லக்னம் 05.23 AM முதல் 07.20 AM வரை 

    கும்ப லக்னம் 07.21 AM முதல் 09.02 AM வரை 

    மீன லக்னம் 09.03 AM முதல் 10.41 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
     இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

    அஸ்வினி : கவனம் வேண்டும்.
    பரணி : அனுபவம் மேம்படும். 
    கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். பரிசு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

    கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். 
    ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
    மிருகசீரிஷம் : தடைகள் குறையும்.
    ---------------------------------------
    மிதுனம்

    இலக்கியப் பணிகளில் மாற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இறை சார்ந்த சிந்தனை ஏற்படும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திரம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

    மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
    திருவாதிரை : தேடல் அதிகரிக்கும். 
    புனர்பூசம் : சுதந்திரம் மேம்படும்.
    ---------------------------------------
    கடகம்

    உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்பு உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

    புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
    பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
    ஆயில்யம் : வாய்ப்பு உண்டாகும்.
    ---------------------------------------
    சிம்மம்

    மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    மகம் : பிரச்சனைகள் குறையும்.
    பூரம் : இடமாற்றங்கள் சாதகமாகும்.
    உத்திரம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். 
    ---------------------------------------
    கன்னி

    எதிர்பாராத சிலருடைய சந்திப்பு உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் பொலிவு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    உத்திரம் : சந்திப்பு உண்டாகும்.
    அஸ்தம் : பொலிவு மேம்படும்.
    சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
    ---------------------------------------
    துலாம்

    தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். சலனம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

    சித்திரை : மாற்றங்கள் ஏற்படும். 
    சுவாதி : அனுபவமான நாள்.
    விசாகம் : நிதானம் வேண்டும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். தந்தை வழியில் புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    விசாகம் : நெருக்கடியான நாள்.
    அனுஷம் : புரிதல் அதிகரிக்கும்.
    கேட்டை : கவனம் வேண்டும்.
    ---------------------------------------
    தனுசு

    வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். சாதனை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    மூலம் : லாபம் மேம்படும். 
    பூராடம் : குழப்பம் விலகும்.
    உத்திராடம் : இலக்கு பிறக்கும்.
    ---------------------------------------
    மகரம்

    எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறு தூர நடை பயிற்சிகளால் மனஅமைதி உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேளாண் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    உத்திராடம் : மனஅமைதி உண்டாகும்.
    திருவோணம் : அனுபவம் ஏற்படும். 
    அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
    ---------------------------------------
    கும்பம்

    எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் திறமை வெளிப்படும். அசதி குறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

    அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
    சதயம் : ஆதாயம் அடைவீர்கள். 
    பூரட்டாதி : திறமை வெளிப்படும்.
    ---------------------------------------
    மீனம்

    பலதரப்பட்ட சிந்தனைகளால் மனஅமைதி குறையும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். அஞ்ஞான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

    பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும். 
    உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும். 
    ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக