>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 16 மார்ச், 2022

    வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக பல அட்டகாசமான அம்சங்களை வெளியிட்ட டெலிகிராம்: முழு விவரம்.!

    டெலிகிராம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக டெலிகிராம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டெலிகிராம் செயலியில் பயனுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது டெலிகிராம் செயலியில் பல்வேறு புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களில் செமி டிராஸ்பெரண்ட் இன்டர்பேஸ், அட்டாச்மெண்ட் மெனு, டவுன்லோடு மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டெலிகிராம் அப்டேட்: ஆண்ட்ராய்டு-செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ்

    அதாவது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிகிராம் செயலி ஆனது தனித்துவமான டிராஸ்பெரண்ட் டிசைனை வழங்கியுள்ளது என்பது
    குறிப்பிடத்தக்கது.

    டெலிகிராம் அப்டேட்: டவுன்லோட் மேனேஜர்

    டெலிகிராம் அறிமுகம் செய்துள்ள டவுன்லோட் மேனேஜர் அம்சத்தின் மூலம் நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும். அதே சமயம் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் இதன் மூலம் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக டெலிகிராம் முன்பு 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    டெலிகிராம் அப்டேட்: அட்டாச்மெண்ட் மெனு

    டெலிகிராம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அட்டாச்மெண்ட் மெனு அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். பின்பு இந்த அட்டாச்மெண்ட மெனு உதவியுடன் நாம் எந்தெந்த ஃபைல்களை சமீபத்தில் அனுப்பியிருக்கிறோம் என்பதை
    கண்காணிக்கவும், அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்க முடியும்.

    டெலிகிராம் அப்டேட்: போன்நம்பர் லிங்க்ஸ்

    போன்நம்பர் லிங்க்ஸ் அம்சம் என்னவென்றால், டெலிகிராம் வாடிக்கையாளர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். குறிப்பாக இதன் மூலம் போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெலிகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம்

    இப்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் போன்ற ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராம் செயலியில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். அதேபோல் ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் டெலிகிராம் நிறுவனம் விரைவில் பல்வேறுபுதிய அம்சங்களை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக