Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 டிசம்பர், 2018

திவால் ஆகுமா இந்தியா.. பாகம் - 2


நேற்று எழுதிய பதிவில் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு உதாரணம் சொல்லவே அமெரிக்காவை எழுதினேன். அதில் தங்கத்தை குறிப்பிட்டு இருந்ததால் எல்லாரும் உடனே தங்கம் வாங்கலாமா என கேட்கின்றனர், அமெரிக்காவின் USD Indexக்கும் தங்கத்துக்கும் தொடர்பு உண்டு, இண்டெக்ஸ் ஏறினால், தங்கம் இறங்கும், இண்டெக்ஸ் இறங்கினால் தங்கும் ஏறும், நேற்று இரவு அமெரிக்காவின் FED தனது வட்டியை 2.25 என்ற புள்ளியில் இருந்து 2.50 புள்ளிகளாக உயர்த்தியது, அதனால் காலையிலயே 15$ வரை தங்கம் குறைந்தது, இதையெல்லாம் கவனித்துக்கொண்டே இருப்பதால் வர்த்தகத்தில் பாதிப்பில்லை. இங்கே சொல்ல வருவது நம் பணத்தை சேமிக்க தங்கமும் ஒரு ஆப்சன், எல்லா பணத்தையும் தங்கத்திலே சேமியுங்கள் என அர்த்தமில்லை

இப்பொழுது இந்தியாவின் நிலைக்கு வருவோம். அன்னிய செலாவணி, மானிட்டரி டெபிட் போன்ற விசயத்தில் நுழைந்து குழப்ப விரும்பவில்லை, மேலும் எனது கட்டுரைகள் சாமான்யனுக்கும் புரியவேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஒரு நாட்டின் தனி மனித வருமானம் அந்த நாடு பொருளாதாரத்தில் உலக அரங்கில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை காட்டுவது, நமது நாடு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தாலும் இந்த தனிமனித வருமானம் எவ்வாறு கணக்கிடப்படகிறது என்பதை கவனிக்கனும், ஒரே அலுவலத்தில் மேனேஜர் 10000 சம்பளம் வாங்குவார் அவருக்கு கீழே வாட்ச்மேன் வரைக்கும் முறையே 10000 குறைந்து கொண்டே வருகிறது, வாட்ச் மேனுக்கு சம்பளம் 10000 ஆனால் அந்த அலுவலுகத்தின் சராசரி தனிநபர் வருமானம் 55000 என்றால் உங்களால் எப்படி அதை பார்க்கமுடிகிறது.

புள்ளிவிபரங்களின் ஏமாற்று வேலை இப்படி தான் நடக்கிறது. இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானியில் ஆரம்பித்து 10 ரூபாய் வரி கட்டும் நபரையும் வகுத்து தனிநபர் வருமானம் காட்டப்படுகிறது. இந்த புள்ளிவிபர கணக்கு தனிநபர் வருமானத்தில் மட்டும் இல்லை, நமது உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி. வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என எல்லா தளங்களிலும் இதே வகுத்தல் தான். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும் விலைவாசி கட்டுக்குள் இருப்பது போல் அரசு கணக்கு காட்டியது இப்படி தான்,

நமது நாட்டில் வேலையல்லாதோர் எண்ணிக்கை 30% மேல் இருக்கும் என்பது என் கணிப்பு, சமீபத்தில் ரயில்வே துறையில் 90000 பணி காலி இடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பிள்ளனர். ஒரு லட்சம் காலி இடங்கள் என்றாலும் இது 250 மடங்கு என்பதை கவனிக்க, ஆனால் அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்பதாக நமக்கு புள்ளி விபரம் கொடுக்கிறது, உண்மையில் நடந்தது என்ன?



ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 பணி ஆட்கள் இருந்தால் அவர்களிடம் EPF அதாவது employee provident fund (வருக்கால வைப்பு நிதி ) சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசிடம் கொடுக்க வேண்டும், பணி ஓய்வின் பொழுது நமக்கு வட்டியுடன் கிடைக்கும். இந்த அரசு வந்தவுடன் தொழிலாளர் நலதுறைக்கு ஒரு அறிக்கை விடுக்கிறது, அது என்னவென்றால் ஒரு நிறுவனத்தில் 10 பேர் பணி புரிந்தாலே அந்த நிறுவனம் EPF பிடித்தம் செய்ய வேண்டும் என்று, அதற்கு முன் 10 திலிருந்து 19 பேர் வரை பணி புரிந்த நிறுவனங்கள் அரசின் ஆணையால் அவர்களுக்கு வைப்பு நிதி கட்டியது, அப்படியானால் நிதி வருகை அதிகரிக்கும், அதை காட்டி வேலை வாய்ப்பை உருவாக்கியதாக அரசு கணக்கு காட்டியது, உண்மையில் அதிகரித்துள்ளதா?

அடுத்து முத்ரா வங்கி, சிறு/குறு தொழில் தொடங்க முத்ரா வங்கி மூலம் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல கோடி பேர் பலன் பெற்று சொந்த தொழில் ஆரம்பித்துள்ளாதகவும் கணக்கு சொன்னார்கள். அவர்கள் கொடுத்ததாக சொல்வது 3000 கோடி, அதில் 70% மேல் கடன் பெற்றவர்கள் பெற்றது வெறும் 50000 மட்டுமே, அதிகார மையத்தில் தொடர்பு இருந்தவர்கள் கோடிகளில் கடன் பெற்றனர். சரி 50000 கடன் பெற்றவர்கள் எத்தனை பேர் தொழில் தொடங்கி இருப்பர், நீங்களே யோசித்து சொல்லுங்கள் 50000 ரூபாயில் என்ன தான் தொழில் செய்ய முடியும்.

இந்த நாட்டின் நிலமையில் நாம் தமிழகத்தை சேர்க்கவே வேண்டாம், தமிழ்நாடு இந்தியாவின் அதிக வருவாய் பெறும் மாநிலமாக இருக்க காரணம் நாம் தற்சார்பு கொள்கை கொண்டவர்கள், அரசு வேலை தான் வேண்டும், ஒயிட் காலர் வேலை தான் வேண்டும் என்று காத்திருப்பதில்லை. ஒட்டகம் மேய்க்கக்கூட துபாய் போயிருவோம், அதே போல் நம் மாநிலத்தை முன்னால் ஆட்சி செய்தவர்கள் ஏற்படுத்திய கட்டுமானம் தேவையான வேலை வாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் கொடுத்துள்ளது

பெத்த மகன் சோறு போடாமல் கைவிட்டாலும் தெரு தெருவாக கீரை விற்று தன்னை காப்பாற்றிக்கொள்ளும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு, அதனால் நாடு பொருளாதார நெருக்கடியை சந்திந்தாலும் நம்மால் மீண்டு வர முடியும், எதில் எதில் முதலீடு செய்யலாம் என இப்பவே குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்கள் பணம் வங்கியில் இருப்பதால் தற்சமயம் எந்த ஆபத்தும் இல்லை. தொடர் முடியும் வரை நீங்கள் காத்திருக்கலாம்



மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக